
ராசாத்தி, சத்யா விடைபெறுகிறார்கள் - சோகத்தில் ரசிகர்கள்
அதேப்போல் மற்றொரு தொடரான சத்யாவிலும் தைரியமான பெண்ணான ரெளடி பேபி சத்யாவுக்கும் பணக்கார பிஸினஸ் இளைஞரான அமுல் பேபி பிரபுவிற்கும் இடையே நடக்கும் காதல் கதை சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு தொடர்களுமே வருகிற அக்டோபர் 24 ஆம் தேதியோடு முடிய போவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒரு புரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு தொடர்களின் நாயகன்கள், நாயகிகள் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த தொடர்கள் முடிவுக்கு வருகின்றன. இவ்வளவு நாள் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. பிரியமுடியாமல் தான் சொல்கிறோம் குட்பை என தெரிவித்துள்ளனர்.
ஆனால், தொடர்கள் முடித்து வைக்கப்படுவதற்கான உண்மையான காரணங்கள் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. திடீரென வெளிவந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சீரியல்களை தொடரும்படியும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கமெண்டுகளில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!