
‛பாண்டியன் ஸ்டோர் கவிதா கவுடா திருமணம் : நடிகரை மணந்தார்
கடைசியாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீனாட்சியாக நடித்தார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது கன்னடத்தில் குக் வித் கிறுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடன் பல சீரியல்களில் இணைந்து நடித்து வந்த சந்தன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. தற்போது இருவருக்கும் பெங்களூருவில் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை கவிதா கவுடா வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!