
செகண்ட் லவ்: பிக் பாஸ் பாணியில் ஒளிபரப்பாகும் புதிய ரியாலிட்டி ஷோ
உலக புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை ஸ்டார் சேனல் இந்தியாவிற்கு கொண்டு வந்தது. விஜய் டி.வி தமிழுக்கு கொண்டு வந்தது. விரைவில் அதன் 10வது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வருகி ஜூலை 2வது வாரத்தில் இருந்து "செகண்ட் லவ்" என்ற புதிய தொடரை ஒளிபரப்ப இருக்கிறது.
காதலில் தோல்வியடைந்தவர்கள், திருமண பந்தத்தில் பிரச்னை உண்டாகி தனித்தனியே பிரிந்து வாழ்கிறவர்கள் முதலானோர் அந்த சூழலில் இருந்து வெளிவந்து அடுத்த காதல் அல்லது ரிலேஷன்ஷிப்பை நோக்கி நகர்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் என்கிறார்கள். நிகழ்ச்சி முடிவதற்குள் பல ஜோடிகள் இணைந்திருக்கும் என்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆனால் வார இறுதி எபிசோடில் மட்டும் இவர் வருவார். தினமும் போட்டியாளர்களுடன் கலந்து பேசும் இன்னொரு தொகுப்பாளர் ஸ்ருதிகா அர்ஜுன் என்கிறார்கள். போட்டியாளர்களாக சினிமா, சின்னத்திரை, மாடலிங் ஏரியாவிலிருந்து இடம் பெற இருக்கின்றனர். 6 ஆண்கள் 6 பெண்கள் என மொத்தம் 12 பேர் இதில் கலந்து கொள்கிறார்கள்.
தொடர்ந்து 35 நாட்கள் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தினமும் இரவு ஒரு மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!