சீரியலுக்கு மீண்டும் குட் பை : பிசினஸில் இறங்கிய பிரியங்கா நல்காரி
Advertisement
Advertisement
சீரியலுக்கு மீண்டும் குட் பை : பிசினஸில் இறங்கிய பிரியங்கா நல்காரி
ஜூன் 12, 2024
அ நிறம் | அளவு
Advertisement
சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடித்து பின் சின்னத்திரையில் ஹீரோயினாக களமிறங்கினார் பிரியங்கா நல்காரி. தமிழில் இவர் நடித்த ரோஜா சீரியலால் புகழின் உச்சத்திற்கு சென்றார். தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக கமிட்டானார். தனது நீண்டநாள் காதலரை மலேசியாவுக்கு சென்று திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கணவருக்காக நடிப்பதை கைவிடுவதாக சொன்னார். பின் கணவரை பிரிந்து வாழ்ந்த சில நாட்களில் மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி தொடரில் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றார். ஆனால், காதல் கணவருடன் மீண்டும் சேரவே அந்த தொடரிலிருந்தும் விலகி தற்போது மலேசியாவில் புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு "தொழிலதிபராக உணர்கிறேன்" என பெருமையாக பதிவிட்டுள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!