
என் வாழ்க்கையை மாற்றிய நெப்போலியன் - மாதம்பட்டி ரங்கராஜ்
அதில், "சிறுவயதில் பள்ளி சீருடை கூட எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். பல நாட்கள் சீருடை அணியாமல் சென்று முட்டி போட்டிருக்கிறேன். இன்று விலையுயர்ந்த விதவிதாமன ஷூ, கார் எல்லாம் வாங்குகிறேன். சிறுவயதில் எதையெல்லாம் தேவையில்லை என்று நினைத்தேனோ அதையெல்லாம் வாங்கி பயன்படுத்துகிறேன். இன்று நான் இவ்வளவு உயர்ந்திருப்பதற்கு காரணம் சிறுவயதில் ஏற்பட்ட ஆசை தான்.
சிறுவயதில் என் பள்ளிக்கு அருகில் சினிமா ஷூட்டிங் நடந்தது. அதில் நெப்போலியனும் சுகன்யாவும் கலந்து கொண்டனர். அப்போது பலரும் சென்று நெப்போலியனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். எனக்கும் அன்புடன் நெப்போலியன் என்று அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். அன்று அவரை சுற்றி பலரும் நின்றது போல் என்னைச் சுற்றியும் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!