
ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்
கார்த்திக் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அதன்பின் தாயாருடன் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த அவர் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், "எங்கள் நிறுவனத்தில் ரோபோ சங்கர் மாமாவும், ப்ரியங்கா அக்காவும் உறுப்பினர்கள். அப்படிதான் எனக்கு அவர்கள் அறிமுகம் கிடைத்தது. நான் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது போல் பிரியங்கா அக்கா என்னை தம்பியாக தத்தெடுத்துக் கொண்டார். என்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பிரியங்கா அக்காவின் பங்களிப்பும் நிறைய உள்ளது" என்று பெருமையாக உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!