சின்னத்திரை நடிகையான கோமதி ப்ரியா அவரது ஹோம்லியான லுக்கிற்காக புகழ் பெற்றவர். தற்போது விஜய் டிவியில் "சிறகடிக்க ஆசை" என்கிற சூப்பர் ஹிட் தொடரில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் கோமதி ப்ரியாவின் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், கோமதி ப்ரியா தற்போது மலையாளத்தில் செம்பநீர்பூவு என்ற சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார். கேரள உடையில் அவர் வெளியிட்டுள்ள சிம்பிளான போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களது கவனத்தை ஈர்த்து லைக்ஸ் பெற்று வருகிறது. மேலும், கோமதி ப்ரியாவின் மலையாள சீரியல் வெற்றி பெற வேண்டுமெனவும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!