
கதறி அழுத பிக்பாஸ் தனலெட்சுமி : காரணம் என்ன சொன்னார் தெரியுமா?
தற்போது வரை எந்த ப்ராஜெக்டிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் கமிட்டாகாத தனலெட்சுமி இன்ஸ்டாகிராமில் மட்டும் அவ்வப்போது ஆக்டிவாக போஸ்ட்டுகளை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராமில் கதறி அழும் வீடியோவை வெளியிட்டிருந்த அவர் "வாழ்க்கையின் முடிவு மரணம்" என கேப்ஷன் போட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து தனலெட்சுமிக்கு என்னாச்சு? என்று கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அதன் தொடர்ச்சியாக ப்ராட்காஸ்ட் வீடியோ வெளியிட்ட தனலெட்சுமி "ரொம்பா நாளா எதுவும் போடல... அதன் வைரலாகனும்னு சும்மா போட்டு விட்டேன்" என்று கூறியுள்ளார். இதைபார்த்து கடுப்பான ரசிகர்கள் தனலெட்சுமியிடம் செல்லமாக கோபம் காட்டி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!