
‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் இணையும் புதிய பிரபலங்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் யார் என்கிற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜய் ரத்னம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
அதேபோல் கதாநாயகி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாலினி ஹீரோயினாகவும், ஹாசினி, ரிஹானா ஆகியோர் சப்போர்ட்டிங் ரோலில் நடிக்க இருப்பதாகவும் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்து வருகிறது. புதிய கதைக்களத்துடன் புதிய நடிகர்களுடன் வெளியாகவுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வருகிற அக்டோபர் 30 முதல் ஒளிபரப்பாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!