
உயிருக்கு போராடிய சமயத்தில் கூட டான்சர் ஒருவர் தவறாக நடந்தார் - சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி காட்டம்
இதுகுறித்து தற்போது பேசியுள்ள சந்தியா, "யானையால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய போது கூட டான்சர் ஒருவர் என் மார்பை பிடித்து தவறாக நடந்து கொண்டார். அந்த விஷயம் என்னை மிகவும் காயப்படுத்தியது. நான் யானையால் தாக்கப்பட்ட சம்பவத்தை விவாதம் ஆக்கினார்கள். எனக்கு மாதவிடாய் இருந்தது, அதனால் தான் யானை தாக்கியது என்றனர். எனக்கு மாதவிடாய் என்பது மத்தவங்களுக்கு எப்படி தெரியும். நான் சொன்னால் தானே அது உண்மை. உண்மையில் யானை கோபமடைய காரணம் மூன்று முறை யானையை நடந்து வர செய்து டேக் எடுக்க செய்தது தான். அது ஷூட்டிங் யானை இல்லை கோயில் யானை. ஆனால் இன்று வரை கூட இதுகுறித்து என்னிடம் யாருமே விளக்கம் கேட்கவில்லை" என்று பரப்பான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் வைத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!