
கதாநாயகியை தேர்வு செய்யும் ராதிகா, கே.எஸ்.ரவிகுமார்
அவர்களுக்கு பாடும் திறன், ஆடும் திறன், நடிப்பு திறன் வெளிப்படுத்தும் வகையிலான சுற்றுகள் நடத்தப்பட்டு அதற்கு மதிப்பெண் வழங்கப்படும். இதன் முடிவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகிறவர்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்படுவார்கள். அவரை கே.எஸ்.ரவிகுமார் தனது படத்தில் அறிமுகப்படுத்துவார். வேறு இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார் நடுவர்களாக இருந்து நடத்துகிறார்கள். கலக்கப்போவது யார் புகழ் குரேஷி தொகுத்து வழங்குகிறார். கடந்த 29ம் தேதி தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!