
பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ்
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து தனக்கு சோஷியல் மீடியாவில் நடந்த மோசமான நிகழ்வை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.
"சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு வலை வீசும் சிலர் செண்டிமெண்ட்டாக பேசி மயக்குவார்கள், சிலர் பணத்தை காட்டி மயக்குவார்கள். அப்படி ஒருநபர் எனது நிர்வாண வீடியோவை அனுப்ப சொல்லியும், அந்தரங்க பாகங்களை காட்ட சொல்லியும், கேவலமான செயல்களை செய்து அதை வீடியோவாக அனுப்ப சொல்லியும் கேட்டார். அதற்கு 15 லட்சம் பணம் தருகிறேன் என்று சொன்னார். அவர் யார் என்று தெரிந்துகொள்ளவும், சிக்க வைக்கும் பொருட்டும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால், அவர் சிக்கவில்லை". எனவே, பெண்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ரிஹானா அட்வைஸ் செய்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!