
ஆல்யா சொன்ன அப்டேட்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரசிகர் ஒருவர் "நீங்கள் எந்த சேனலில் நடிக்கப்போகிறீர்கள்?" என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் கூறும் ஆல்யா, "நான் நான்கு கதைகளை கேட்டிருக்கிறேன். அதில் இரண்டு பிடித்திருக்கிறது. எந்த சேனல் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். கண்டிப்பாக நீங்கள் சந்தோஷப்படும் சேனலில் தான் நடிப்பேன்" என்று கூறியுள்ளார். மேலும், இன்னும் இரண்டே மாதங்களில் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்றும் கூறி உள்ளார். ஆல்யா மானசாவை மீண்டும் திரையில் பார்க்க போவதால் மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் இப்போதே அவரது ரீ- என்ட்ரியை கொண்டாடி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!