
மீண்டும் களமிறங்கிய அம்மா மகள் காம்போ! எந்த சேனலுக்கு தெரியுமா?
சாராவின் திறமையான ஆங்கரிங், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அர்ச்சனாவுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புகளுக்காக சாரா வெளியிட்ட மெட்சூர்டான பதிவு என தனது செயல்களால் தாயை மிஞ்சிய குழந்தையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயனின் "டாக்டர்" படத்தின் மூலம் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். தற்போது அர்ச்சனாவை காட்டிலும் சாராவுக்கான ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். ஆனால், டாக்டர் படத்திற்கு பிறகு அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து சின்னத்திரையில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், அர்ச்சனா - சாரா காம்போவில் "சூப்பர் மாம் -3" நிகழ்ச்சி விரைவில் வெளியாகவுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், இந்நிகழ்ச்சியில் தங்களது குழந்தைகளுடன் சீரியல் நடிகைகள் அபிதா, ரோஷினி, சசிலயா, மீராகிருஷ்ணன் மற்றும் லெஷ்மிப்ரியா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். தங்களுக்கு பிடித்தமான நடிகைகளின் செல்லக்குழந்தைகளை பார்க்கவும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் அர்ச்சனா - சாராவின் நிகழ்ச்சி தொகுப்பை ரசிக்கவும் நேயர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சூப்பர் மாம் சீசன் 3 வருகிற செப்டம்பர் 4ம் தேதி முதல் ஞாயிறுதோறும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!