
சித்ரா மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு : நக்ஷத்திரா பற்றி பகீர் கிளப்பும் ஸ்ரீநிதி விஜய்
சமீபத்தில் நடிகர் சிம்புவை தான் காதலிப்பதாகவும், அவரும் தன்னை காதலிக்கிறார். என்னை அவருடன் சேர்த்து வையுங்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், தற்போது புதிதாக தனது சக நடிகையான நக்ஷத்திரா குறித்தும் சில தகவலை வெளியிட்டுள்ளார் அவை பரபரப்பாகி உள்ளது.
ஸ்ரீநிதி வெளியிட்ட அந்த வீடியோவில், "நக்ஷத்திரா எனது நெருங்கிய தோழி. என்னுடன் இரண்டரை ஆண்டுகள் என் அறையில் இருந்துள்ளார். சினிமா துறைக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்திருக்கா. அதுக்காக சில தப்புகளையும் செய்து இருக்கா. ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது. அவ ஒரு பையன காதலிக்கிறா. அவங்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிஞ்சிடுச்சு. ஆனா இது எதுவுமே எங்களுக்கு தெரியாது. அவளுக்கு சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ அக்கவுண்ட்ல 10 ஆயிரம் ரூபாய் கூட கிடையாது. நக் ஷத்திராவை அந்த பையனின் குடும்பம் தங்களது கட்டிற்குள் வைத்துள்ளனர். சித்ராவுக்கு நடந்த மாதிரி நக்ஷத்திராவுக்கும் ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு. என்னை பொருத்தமட்டில் நக் ஷத்திரா அந்த குடும்பத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று தான் நினைக்கிறேன். இதுதொடர்பாக அந்த குடும்பத்தின் மீது போலீசில் புகார் அளிக்க எண்ணி உள்ளேன். ஆனால் நான் சொல்வதை நக்ஷத்திர நம்ப மறுக்கிறார்" என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!