
அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஸ்ரீநிதி சொன்ன ஷாக் விஷயம்
அந்த பேட்டியில், "நான் பத்தாவது படிக்கும் போது எனக்கு மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் என் அம்மாவுடன் ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். அங்கே அட்ஜெஸ்ட் செய்ய முடியுமா என்று கேட்டார்கள். எங்களுக்கு அப்போது புரியவில்லை. மீண்டும் அனைத்திலும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நாங்கள் அந்த மாதிரி குடும்பத்திலிருந்து வந்தவர்கள் இல்லை என்றோம். உடனே அவர்கள் மகள் இல்லை என்றால் கூட பரவாயில்லை. அம்மா ஓகே தான் என்று சொன்னார்கள். அம்மா மனசு உடைந்து போய்விட்டார். உடனே நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்" என்று கூறியுள்ளார். இந்த பேட்டி வைரலாகி சமூக வலைத்தளங்களில் பரவ ஹீரோயினின் அம்மாவை கூட விடமாட்டீங்களா? என ரசிகர்கள் கொந்தளித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!