
முருகன் கோயிலில் கண்மணியுடன் காவடி தூக்கிய நவீன்
இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ள நவீன் குமார் அங்கே காவடி தூக்கி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை நவீன் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு "எப்போது திருமணம். சீக்கிரம் அடுத்த அப்டேட் விடுங்க" என கேட்டு வருகின்றனர்.
நவீன் குமார் கலர்ஸ் டிவியின் "இதயத்தை திருடாதே" சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். நவீன்குமார் அதில் நடிக்கும் சக நடிகையான ஹீமா பிந்துவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. ஆனால் நவீன் கண்மணியுடனான காதலை வெளிப்படையாக அறிவித்தார். அவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!