பைக் திருட்டு : வருத்தத்தில் மணிமேகலை
ஏப் 19, 2022
Advertisement
பிரபல வீஜே மணிமேகலை திருமணத்திற்கு பின் தொலைக்காட்சியில் கம்பேக் கொடுத்து பல ஷோக்களில் கலக்கி வருகிறார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாகவும் உள்ளார். மணிமேகலை, ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டார் தரப்பிலும் பெரிய அளவில் சப்போர்ட் இல்லை. இருப்பினும் இருவரும் தங்களது உழைப்பால் தொடர்ந்து கார், பைக் என வாங்கி சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிமேகலையின் கணவர் ஹூசைனுடைய பைக் அண்மையில் திருடு போய்விட்டது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதுபற்றி, "திருமணத்திற்கு பிறகு மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய முதல் பைக். மிகவும் சோகமாக உள்ளது. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்துதான் வருதோ!" என சோகமாக பதிவிட்டுள்ளார் மணிமேகலை. அத்துடன் பைக் குறித்த விவரங்களையும் பதிவிட்டு உதவி கேட்டுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!