புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் சின்னத்திரை நடிகர்
செப் 11, 2026
Advertisement
சினிமா நடிகர்களுக்குத்தான் கட்சி தொடங்கும் ஆசை வரவேண்டுமா, சின்னத்திரை நடிகர்களுக்கு வரக்கூடாதா. இப்போது அந்த ஆசை வந்திருக்கும் சின்னத்திரை நடிகர் நவீந்தர். நாதஸ்வரம், அழகு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த இவர் தற்போது சின்னத்திரை நடிகர் சங்க செயலாளராகவும் இருக்கிறார்.
நவீந்தருக்கு அரசியல் புதிதல்ல. இவரது குடும்பமே திமுக குடும்பம்தான். திமுகவிற்காக தேர்தல் பிரச்சாரமெல்லாம் இவர் செய்தார். தற்போது திமுகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் விலகி உள்ளேன். எனது சொந்த ஊர் செங்கல்பட்டு, என் பகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் அதனால் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்கிறேன். ஏற்கெனவே சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் அனுபவம் இருப்பதால் மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறேன். அம்பேத்கர், காமராசர், பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து புது இயக்கத்தைத் தொடங்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நவீந்தர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!