
வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் ஜாக்குலின் : வைரல் வீடியோ
ஜூலை 19, 2022
Advertisement
விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்குலின் இளைஞர்களுக்கு பிடித்தமான டிவி பிரபலங்களில் ஒருவர். வீஜே ரக்ஷனுடன் சேர்ந்து பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சினிமாவிலும் "கோலமாவு கோகிலா" படத்தில் அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து "தேன்மொழி பிஏ" மற்றும் "அன்புடன் குஷி" ஆகிய டிவி தொடர்களிலும் ஜாக்குலின் நடித்தார். சமீபகாலமாக இவரை தொலைக்காட்சியில் அதிகமாக பார்க்க முடியவில்லை. முழுநேர நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஜாக்குலின் அதற்காக பிட்னஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஜாக்குலின் நடிக்கும் போதும், அங்கரிங் செய்யும் போதும் சில நெட்டிசன்கள் அவர் குண்டாய் இருப்பதை வைத்து உருவ கேலி செய்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஜாக்குலின் பகிர்ந்துள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!