புதுகார் வாங்கி அசத்திய வீஜே தீபிகா! குவியும் வாழ்த்துகள்
Advertisement
Advertisement
புதுகார் வாங்கி அசத்திய வீஜே தீபிகா! குவியும் வாழ்த்துகள்
நவ 05, 2023
அ நிறம் | அளவு
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார் வீஜே தீபிகா. இதன் மூலம் பெயர் புகழோடு கொஞ்சம் பணத்தையும் சம்பாதித்த தீபிகா, தனது அம்மா அப்பாவிற்காக சொந்த ஊரில் வீட்டையும் கட்டி முதல் கனவை நனவாக்கினார். இந்நிலையில், தற்போது இந்த தொடர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், சொந்தமாக கார் வாங்கும் தனது மற்றொரு கனவையும் நிறைவேற்றி உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவர் தனது அப்பா அம்மாவுடன் சேர்ந்து கார் முன் நின்று போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தீபிகாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!