புது சீரியலில் ரீ-என்ட்ரியாகும் வீஜே தீபிகா
மார் 23, 2022
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி மருமகளாக ஐஸ்வர்யா கேரக்டரில் அறிமுகமானார் விஜே தீபிகா. ஆனால், அவர் முகத்தில் இருந்த பருக்களுக்கு ட்ரீட்மெண்ட் எடுப்பதற்காக அந்த தொடரை விட்டு விலகினார். அதன் பின் சின்னத்திரையில் தீபிகாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, டான்ஸ், போட்டோஷுட் என மற்ற விஷயங்களில் பிசியாக இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கலர்ஸ் தமிழ் சேனலின் "சில்லுன்னு ஒரு காதல்" தொடரில் வீஜே தீபிகா ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நீண்ட நாள் கழித்து அவர் மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளதால் தீபிகாவின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தனக்கு கிடைத்திருக்கும் சிறிய வாய்ப்பை பயன்படுத்தி தீபிகா சின்னத்திரையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!