திருமண கோலத்தில் வீஜே தீபிகா - சரவண விக்ரமின் போட்டோஷூட்
ஏப் 19, 2022
Advertisement
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கணவன் மனைவியாக நடித்து பிரபலமான ஜோடி வீஜே தீபிகா - சரவண விக்ரம். இவர்களது கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கிரீனில் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததோடு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. திரையை தாண்டி நிஜ வாழ்க்கையிலுமே இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வரவே, தீபிகாவும் சரவணனும் காதலிப்பதாக செய்திகளும் பரவியது. இதற்கு பலமுறை "இல்லை, நாங்கள் நல்ல நண்பர்கள்" என இருவருமே சேர்ந்து விளக்கமளித்துள்ளனர். எனினும், இன்றளவும் நெருங்கிய நட்பிலேயே பயணித்து வருகின்றனர். இதைபார்த்து விட்டு பலரும் வதந்தியாக இருந்தாலுமே இருவரும் நல்ல ஜோடி தான் என வாழ்த்துகளும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், திருமண கோலத்தில் வீஜே தீபிகாவும் - சரவணனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் இருவரது ஜோடி பொருத்தமும் படு சூப்பர். இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிலர் "சொல்லாம கொள்ளாம திருமணம் செஞ்சிட்டாங்களா?" என அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அது வெறும் போட்டோஷூட்டுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது என்பது ரசிகர்களுக்கு லேட்டாக தான் தெரிய வந்தது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!