
அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து மனம் திறந்த விஜயலெட்சுமி
ஆக 26, 2023
Advertisement
சென்னை 28 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான விஜயலெட்சுமி தொடர்ந்து சில படங்களில் நடித்து சின்னத்திரை பக்கம் வந்தார். நாயகி, டும் டும் டும் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். அதன்பின் ஜீ தமிழ் சேனலில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்துடன் 1 கோடி ரூபாய் வென்றார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் விஜயலெட்சுமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் "நடிகர்கள் எதை சொன்னாலும் நடிகைகள் செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் அப்படியில்லை. ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால் அவர் படுக்கைக்கு வருவார் என அவர்களே எண்ணிக் கொள்கிறார்கள். என்னிடமும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். ஆனால், நான் ஏற்கவில்லை" என்று தனக்கு சினிமாவில் நடந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!