சீரியலில் இருந்து விலகிய வில்லி நடிகை!
ஏப் 04, 2022
Advertisement
அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் தொடர்களில் ஒன்று "அன்பே வா". இதில் டெல்னா டேவிஸ், விராட், கன்யா பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஷில்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் அட்டகசாமான நடிப்பை வெளிபடுத்தி வந்தவர் நடிகை சுப்புலெட்சுமி ரங்கன்.
சின்னத்திரை வில்லி நடிகைகளில் சுப்புலெட்சுமி தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். இந்நிலையில், சுப்புலெட்சுமி தற்போது திடீரென அன்பே வா தொடரிலிருந்து வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெளியேறியதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அன்பே வா தொடர் கொலை, போலீஸ் விசாரணை என பரபரப்பான முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த தொடரின் முக்கிய வில்லி நடிகை விலகியிருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அதேசமயம் இனி சுப்புலெட்சுமிக்கு பதிலாக ஷில்பா கதாபாத்திரத்தில் நித்யா ராஜ் என்ற நடிகை நடிக்கவுள்ளார். நித்யா ராஜ் ஜீ தமிழில் ஒளிபரப்பான "என்றென்றும் புன்னகை", "சூர்ய வம்சம்" மற்றும் கலர்ஸ் தமிழின் "எங்க வீட்டு மீனாட்சி" ஆகிய ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!