
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வாய்ப்பு இப்படி தான் கிடைத்தது : சத்யா சாய் கிருஷ்ணன்
ஆக 03, 2024
Advertisement
சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சத்யா சாய் கிருஷ்ணன். இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அரசி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலேயே நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசிய சத்யா சாய், "பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் என்னை நடிக்க அழைக்கும் போது முஸ்லீம் கேரக்டர். கண்ணனுக்கு ஜோடி.. சீரியல் முழுக்க எனது கதாபாத்திரம் வரும் என்று சொல்லி அழைத்தார்கள். நானும் 3 நாட்கள் நடித்திருப்பேன். அதற்குள் முஸ்லீம் கதாபாத்திரத்தால் ஏதோ பிரச்னை என்று சொல்லி அந்த கதாபாத்திரத்தை நிறுத்திவிட்டார்கள். எனினும், பாகம் 2வில் என்னை ஞாபகம் வைத்து அரசி கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!