
தமிழ் சீரியலில் மீண்டும் என்ட்ரியாகும் சுவாதி ராயல்!
மே 11, 2023
Advertisement
கன்னடம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் ஆக்டிவாக நடித்து வருகிறார் சுவாதி ராயல். பெங்களூரை சேர்ந்த இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கேரியரை ஆரம்பித்து இப்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி" என்ற தொடரில் வில்லியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள மோதலும் காதலும் என்கிற புதிய தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் சுவாதி ராயல் கமிட்டாகியுள்ளார். இதில் ஹீரோ சமீருக்கு ஜோடியாக அஸ்வதி என்ற ஹீரோயின் நடித்து வருகிறார். எனவே, இந்த தொடரிலும் சுவாதி ராயல் வில்லியாக தான் மிரட்டப்போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!