
சுந்தரிக்கு கிடைத்த அங்கீகாரம்! வாழ்த்து மழையில் கேப்ரில்லா
அந்த வகையில், ஆர்மாக்ஸ் என்ற நிறுவனம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி, விரும்பப்படும் பிரபலங்களின் பட்டியலை கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் சின்னத்திரை சீரியலில் பிரபலமான புனைகதை கதாபாத்திரங்களை பட்டியலிட்டு உள்ளது. அதில் முதல் இடத்தை "சுந்தரி" தொடரின் "சுந்தரி தேவி" என்ற கதாபாத்திரம் பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாமிடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலின் கண்ணம்மா கேரக்டர், மூன்றாமிடத்தில் ரோஜா சீரியலின் ரோஜா கேரக்டர், நான்காமிடத்தில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலின் பாக்கியா கேரக்டர், ஐந்தாமிடத்தில் கயல் சீரியலின் கயல் கேரக்டர் இருக்கிறது.
இதனையடுத்து, மிக குறைந்த நாட்களில் முதல் இடத்தை பிடித்துள்ள சுந்தரி கதாபாத்திரத்தின் நடிகை கேப்ரில்லா செல்லஸுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!