
காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுபா பூஞ்சா
சுபா பூஞ்சாவுக்கும், உடுப்பியை சேர்ந்த தொழில் அதிபர் சுமந்த் பில்லவா என்பவருக்கும் 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. இது காதல் திருமணம். திருமணமாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்துத் வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சுபா பூஞ்சாவும், அவரது கணவர் சுமந்த் பில்லவாவும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்துத் கோரி பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தற்போது விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்திருப்பது கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!