
நக்ஷத்திராவின் வளைகாப்பில் ஸ்ரீநிதி
மார் 30, 2023
சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதியும், நக்ஷத்திராவும் நல்ல தோழிகளாக இருந்து வந்தனர். இடையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநிதி நக்ஷத்திராவை பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏதேதோ சர்ச்சைகளை கிளப்பினார். இதனையடுத்து மன அழுத்தத்திற்காக சிகிச்சையும் பெற்றார். மற்றொருபுறம் நக்ஷத்திரா அவரது கணவர் விஸ்வாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்திராவுக்கு கர்ப்பகாலத்தில் நிகழும் வளைகாப்பு சடங்கு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி தோழியை வாழ்த்தி நலங்கு வைத்துள்ளார். மேலும், விஸ்வாவுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!