
ஹீரோயின் ஆன பாண்டியன் ஸ்டோர் லாவண்யா
ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிக்கும் படம் இது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்து இருக்கிறார் சதீஷ். பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பரத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ். மேலும் ஆறுபாலா, "திரௌபதி சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் சதீஷ் கூறியதாவது: தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனையை மையமாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக் ரேசர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் அகில் சந்தோஷ். ஆனால் அவர் கேட்கும் விலை உயர்ந்த ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கி தர முடியவில்லை. ஆனாலும் தனது லட்சியத்தில் பின்வாங்காத அகில் தானே கஷ்டப்பட்டு பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயல்கிறார். இதற்கிடையில் அவர் சந்திக்கும் போராட்டங்கள் அதை மீறி அவரால் சாதிக்க முடிந்ததா என்பதை விறுவிறுப்புடன் படம் விளக்குகிறது. இதற்கிடையில் இளவட்ட காதல் கதையும் இழையோடுகிறது.வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!