சின்னதிரையில் சீரியலில் சினேகன்
ஜூலை 31, 2024
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் சினேகன். "யோகி" படத்தின் மூலம் நடிகர் ஆனார். படம் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு "உயர்திரு 420" என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். இந்த படமும் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு சில படங்களில் நடித்தார், சில படங்கள் வெளிவரவில்லை. வெளிவந்த படங்கள் வரவேற்பை பெறவில்லை.
அதன் பிறகு சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தினார். "பிக் பாஸ்" நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் அவர் சின்னத்திரை தொடர் ஒன்றில் நாயகனாக நடிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. "பவித்ரா" என்ற பெயரில் உருவாகும் இந்த தொடரில் டைட்டில் கேரக்டரில் பவித்ராவாக அனிதா சம்பத் நடிக்கிறார். அவரது ஜோடியாக சினேகன் நடிக்கிறார். இந்த தொடரை பிரியன் என்பவர் இயக்குகிறர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. சினேகன் சின்னத்திரை நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!