
சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சித்தாரா
அக் 22, 2023
Advertisement
பிரபல சினிமா நடிகையான சித்தாரா புதிய தொடரில் நடிக்க இருக்கிறார். அந்த தொடருக்கான புரோமோ அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. பூவா தலையா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சித்தாரா, லதா ராவ், ஸ்வேதா ஷ்ரிம்படன் மற்றும் பாண்டி கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக தமிழ் சின்னத்திரையில் கங்கா யமுனா சரஸ்வதி, ஆர்த்தி, காவேரி மகள், பராசக்தி ஆகிய தொடர்களில் சித்தாரா நடித்திருந்தார். தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூவா தலையா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் கம்பேக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!