
வேலுநாச்சியர் கெட்டப்பில் அசத்தும் சிவின்
ஜன 04, 2023
Advertisement
பிக்பாஸ் சீசன் 6-ல் சிறப்பாக விளையாடி வரும் சிவின் கணேசனுக்கு ரசிகர்களின் ஆதரவும் ஏகபோகமாக கிடைத்து வருகிறது. இந்த சீசனில் பிக்பாஸ் டைட்டில் பட்டம் வெல்ல முழு தகுதியும் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அது சிவினுக்கு தான் என சிலர் வெளிப்படையாக கருத்தும் தெரிவித்து வருகின்றனர். ஐடி ஊழியர் மற்றும் மாடலான சிவின் இந்தியா மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற மிஸ் டிராண்ட் போட்டிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடமும் நல்ல பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டின் வீர மங்கையான வேலுநாச்சியாரை போலவே கெட்டப் போட்டு கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!