
பாலியல் சீண்டல் : அஞ்சலி பாஸ்கர் என்ன செய்தார் தெரியுமா?
மே 29, 2024
Advertisement
நடிகைகள் மற்றும் பிரபலமான பெண்கள் பலரும் சமீபகாலங்களில் தங்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை அஞ்சலி பாஸ்கரும் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், "நான் கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து வந்ததால் பேருந்தில் பயணம் செய்வேன். பேருந்தில் சிலர் பெண்களை தவறாக பார்ப்பார்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவார்கள். ஒருசமயம் ஒரு நடுத்தவர வயது நபர் என்னை தவறான வகையில் உரசினார். நான் உடனே அந்த நபருக்கு ஓங்கி ஒரு குத்துவிட்டு திட்டினேன். அதன்பின் அந்த நபர் இறங்கி சென்றுவிட்டார். ஆனால், அப்போது பேருந்தில் இருந்த ஒரு பெண் கூட எனக்காக ஆதரவு குரல் கொடுக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது" என்று கூறியிருக்கிறார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!