நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம்
மார் 07, 2021
Advertisement
திருமுருகன் இயக்கத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமான ஒளிபரப்பான சீரியல் நாதஸ்வரம். மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தச் சீரியலில் நாயகன் கோபியின் முறைப்பெண்ணாக நடித்திருந்தவர் கீதாஞ்சலி. இந்த சீரியலை அடுத்து ராதிகாவின் "வாணி ராணி" "நிறம் மாறாத பூக்கள்" "ராஜா ராணி" உள்ளிட்ட சீரியலிலும், ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி கீதாஞ்சலிக்கும் திருவாரூரைச் சேர்ந்த கிரிராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த இந்தத் திருமணத்தில் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. மணமகன் கிரிராஜ் துபாயில் வேலை பார்த்து வருவதால் விரைவில் கீதாஞ்சலியும் துபாய் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!