
4 மணிநேர கிளைமாக்ஸை ஒளிபரப்பவுள்ள ஹிட் சீரியல் : ரசிகர்கள் ஆர்வம்
ஜூலை 27, 2022
Advertisement
சின்னத்திரை வரலாற்றில் இதுவரை பார்த்திராத அளவில் 4 மணி நேர சீரியல் கிளைமாக்ஸ் ஜீ தமிழில் ஒளிபரப்ப உள்ளனர். ஜீ தமிழின் நம்பர் 1 சீரியலாக பிரபலமான "செம்பருத்தி" தொடர் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 1420 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடர் வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜூலை 31 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும். மேலும், நேயர்கள் எதிர்பார்த்திராத வகையில் 16 திருப்பங்களுடன் ஜீ தமிழின் மற்ற சீரியல்களின் கதாநாயகிகளும் இந்த பிரம்மாண்ட கிளைமாக்ஸில் பங்கேற்க உள்ளனர். இதனால் செம்பருத்தி தொடரின் கிளைமாக்ஸ் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!