
ரெங்கநாயகியாக மாறிய லயா : வைரலாகும் போட்டோஸ்
ஆக 10, 2022
சமூக ஊடகங்களில் கருத்து பேசி பிரபலமான சசி லயா தற்போது சின்னத்திரையில் நடிக்க வந்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய தொடரான "மீனாட்சி பொண்ணுங்க" என்ற தொடரில் ரெங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக லயா நடித்து வருகிறார். அவரது கதாபாத்திரத்திற்கான புரோமோ அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகை சசி லயா தனது ரெங்கநாயகி கெட்டப்பின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் போதே ரெங்கநாயகி கதாபாத்திரம் எவ்வளவு ஸ்ட்ராங்கான கதாபாத்திரமாக இருக்கப் போகிறது என்பது தெரிகிறது. எனவே, சின்னத்திரையில் ஆரம்பத்திலேயே அதகளமாக அடியெடுத்து வைத்திருக்கும் லயாவிற்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!