
வெறுப்பவர்களுக்கு சிறு குறிப்பு : சாராவின் பதிவு
இதற்கிடையில் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்க்கும் சிலர் அர்ச்சனா மற்றும் சாராவை கிண்டலடிக்கும் வகையில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான சாரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எல்லோருக்கும் வணக்கம். எங்களை வெறுப்பவர்களுக்கான சிறு குறிப்பு. ஒரு டிவி நிகழ்ச்சி வீடியோவின் கமெண்டுகளில் எங்கள் மீதான அதிகமான வெறுப்புணர்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிலும் பெண்களே எங்களை அதிக அளவில் திட்டுகிறார்கள். ஏன் என்று புரியவில்லை. வெறுப்பவர்களை எண்டர்டெயின் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. உங்கள் கருத்தை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி" என கூறியுள்ளார். அவரது பதிவிற்கு விஜய் டிவியின் திவ்யதர்ஷினி உட்பட செலிபிரேட்டிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!