
வானத்தை போல சீரியலில் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ்
செப் 30, 2023
Advertisement
டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் இந்த வார ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஸ்பெஷல் எபிசோடில் வீரசிங்கம் என்ற புதிய கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் என்ட்ரி கொடுக்கிறார். சில வருடங்களாகவே சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் சஞ்சீவ் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் கெட்டப்பில் வானத்தை போல சீரியலில் சின்ராசுக்கு நண்பனாக என்ட்ரி கொடுக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. அதேசமயம் அதிக பில்டப்புடன் வரும் வீரசிங்கம் கதாபாத்திரம் ஸ்பெஷல் எபிசோடுக்கு மட்டும் தானா? அல்லது சீரியலில் தொடர்ச்சியாக பயணிக்க இருக்கிறதா? என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!