
சீரியலில் வொர்க் அவுட்டான கெமிஸ்ட்ரி : நிஜத்திலும் கைகோர்த்த சந்தியா-பிரிட்டோ மனோ
பிப் 04, 2023
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "தவமாய் தவமிருந்து" தொடரில் கணவன் மனைவியாக நடித்து வரும் சந்தியா ராமசந்திரன் - ப்ரிட்டோ மனோவிற்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சீரியலில் மலர்-பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இருவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். இந்த கெமிஸ்ட்ரி நிஜத்திலும் மலர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் கடந்த ஜனவரி 25ம் தேதி சந்தியா - பிரிட்டோவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை புகைப்படங்களுடன் இருவரும் பகிர்ந்துள்ளனர். சர்ப்ரைஸில் மூழ்கிய ரசிகர்கள் சந்தியா மற்றும் பிரிட்டோவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!