
60 வயது மாநிறம் : ஞாயிறு அன்று டிவியில் ஒளிபரப்பு
இது புகழ்பெற்ற கன்னடத் திரைப்படமான "கோதி பண்ணா சாதாரண மைகட்டு"வின் தமிழ் ரீமேக். வயது மூப்பின் காரணமாக அல்சைமர் நோயால் (நினைவு மறத்தல்) காணாமல்போன தனது 60 வயது தந்தையை தேடும் ஒரு மகனின் கதை. முதியவர்களுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் தர வேண்டும் என்று வலியுறுத்துகிற படம். 2018ம் ஆண்டு வெளியான இந்த படம் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நாளை (பிப்.5) மதியம் 1.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!