காதலனை கரம்பிடித்த சாம்பவி
பிப் 13, 2022
Advertisement
சின்னத்திரை நடிகையான சாம்பவி தெலுங்கில் தற்போது சாதனா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாம்பவி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல் உலகில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் புது சீரியலில் இவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. சாம்பவி தனது நீண்ட நாள் காதலரான பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
தாமரை, கண்மணி ஆகிய தொடர்களிலும், விஜய் டிவியில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரிலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் சாம்பவி இடம்பிடித்தார். அவருக்கு தற்போது பலரும் திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!