
வருத்தத்தில் சஹானா
ஜூன் 24, 2022
Advertisement
சின்னத்திரை நடிகையான சஹானா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஆதிரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கதையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நீது சிஞ்சு என்பவர் நடித்து வந்தார். அதன்பிறகு அவரை மாற்றிவிட்டு சஹானாவை நடிக்க வைத்தனர். "புதுப்புது அர்த்தங்கள்" நெடுந்தொடர் என்பதால் சஹானா நடிக்கும் கதாபாத்திரமும் நீண்ட நாட்கள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், சஹானா 30 எபிசோடுகள் மட்டுமே நடித்துள்ள நிலையில், ஆதிரா கதாபாத்திரம் இறப்பது போல் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த சஹானா மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!