
வங்காள மொழியில் ரீமேக்காகும் ரோஜா சீரியல்!
இந்த தொடரில் நாயகனாக சிபு சூரியனும், நாயகியாக ப்ரியங்க நல்காரியும் நடித்து வருகின்றனர். மேலும், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, ராஜேஸ், சிவா உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த தொடர் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த தொடர்களில் டாப் இடத்தில் உள்ளது. தற்போது இந்த தொடரை வங்காள மொழியில் ரீமேக் செய்ய உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்காள மொழியில் "சாத்தி" என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதற்கான புரோமோ கடந்த ஜனவரி 4ம் தேதி வெளியிட்டது.
வழக்கமாக ஹிந்தி சீரியலில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்தோ, ரீமேக் செய்தோ சீரியல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் தற்போது தமிழ் சீரியல்களும் மற்ற மொழியில் ரீமேக் செய்யும் அளவுக்கு ஹிட் அடித்து வருகின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!