
எங்க வீட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேல்முருகன் நெகிழ்ச்சி!!
அந்த வகையில், சிநேகன் - கன்னிகா, சுஜா வருணி - சிவகுமார் , அனிதா சம்பத் - பிரபாகரன், ரம்யா என்.எஸ்.கே - சத்யா, சென்ராயன் - கயல்விழி, வேல் முருகன் - கலா, ஆர்த்தி - கணேஷ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் வேல்முருகன், "ஒவ்வொரு மனைவிக்கும் அவங்களோட புருஷன் ஸ்டைலா, கெத்தா இருக்கணும்னு ஆசை இருக்கும். எனக்கு அப்படி எல்லாம் இருக்க தெரியாது. ஆனால், என் மனைவி என்னை அப்படியே ஏத்துக்கிட்டா" என்று சொல்லி கண்ணீர் மல்க நெகிழ்ச்சியாக பேசுகிறார்.
எங்க வீட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!