பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரியோ - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
அக் 23, 2021
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்களின் பேவரைட் தொடராக உள்ளது. 700 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடர் விஜய் டிவியின் பெரிய ஹிட் தொடர் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. தற்போது எதிர்பாரத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் டிஆர்பியிலும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரில் பிக்பாஸ் பிரபலமான ரியோ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதை அந்த தொடரில் நடித்து வரும் ஸ்டாலின் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரியோ இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் வருகிறாரா அல்லது கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா எனபது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் சின்னத்திரையில் ரியோவின் இந்த என்ட்ரியை பலரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!