
இவரா அவர்? ரவீனா தாஹாவின் புகைப்படத்தால் வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்
ஜூலை 29, 2022
Advertisement
ரவீனா தாஹா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது "மெளன ராகம் -2" தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். வயதுக்கு மீறி கவர்ச்சி காட்டி வரும் ரவீனா இன்ஸ்டா இளைஞர்களின் கனவு கன்னி வலம் வருகிறார். அவர் போடும் பதிவுகள் அனைத்தும் லைக்ஸ்களை குவித்து வருகின்றன. இந்நிலையில், அவர் சினிமாவில் மட்டுமில்லை சீரியலிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள செய்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான வசந்தம் தொடரில் பள்ளி செல்லும் சிறுமியாக 5 வயதிலேயே ரவீனா தாஹா நடித்துள்ளார். அந்த புகைப்படமானது சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து மிகவும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் ரவீனாவின் குழந்தைப் பருவ புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் வைத்துக் கொண்டு இந்த குழந்தையா இப்ப ஹீரோயின்? என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…