
வீஜே அர்ச்சனாவுக்கு பதில் புது அர்ச்சனா! ஹிட் சீரியலில் நடந்த மாற்றம்
ஆனால், தற்போது அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிவிட்டதாகவும் விரைவில் புதிய புராஜெக்ட்டில் சந்திக்கிறேன் என்றும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அதேசமயம் "ராஜா ராணி-2" தொடரின் வில்லி கதாபாத்திரத்தில் இனி அர்ச்சனாவுக்கு பதிலாக அர்ச்சனா குமார் நடிக்க உள்ளார். அர்ச்சனா குமார் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" என்கிற நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். "பொன் மகள் வந்தாள்" தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாகவும் அறிமுகமாகி நடித்து வருகிறார். பழைய அர்ச்சனாவின் இடத்தை புது அர்ச்சனா நிரப்புவரா என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!