
அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது : ரக்ஷிதா கண்ணீர்
இந்த நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்துள்ளார். குடும்ப வாழ்வில் பிரச்னை காரணமாக தனியாக வாழ்ந்து வரும் ரக்ஷிதா முதன் முறையாக தன் திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் குயின்சி மற்றும் கதிருடன் பேசிய ரக்ஷிதா திருமணம் பற்றி பேசும்பொழுது, "நம்ம அடுத்த ஜென்ரேஷன் எவ்ளோ கஷ்டப்படுவங்க. அவங்களுக்கு திருமணம் ஒரு கான்செப்ட்டே கிடையாது. நான் குடும்பம் குடும்பம்னு சொல்லியே எல்லாத்தையும் இழந்தேன். ஒரு பார்ட்டி கூட போகமாட்டேன். எல்லா பேரண்ட்ஸூம் தங்களோட குழந்தைன்னு பெண் குழந்தைகளுக்கு எல்லாத்தையும் கொடுத்து வளத்துட்றாங்க. ஆனா, மேரேஜ்க்கு அப்புறம் அவங்களுக்கு எதாச்சும் செய்யனும்னா அவர்ட்ட கேட்கனுமா? வேண்டாமான்னு யோசிக்க வேண்டியிருக்கு. அம்மா அப்பாவ வேறு பார்த்துக்குவா?. நாம தானே பாத்துக்கனும். ஆனால், சில கட்டுபாடுகளால அவங்களுக்கு எதுவுமே செய்யமுடியாம போய்டுது. நான் சம்பாதிக்கிறேன். நான் ஏன் என்னுடைய அப்பா அம்மாக்கு கொடுக்கக்கூடாதா?. அதை கேட்க நீ யார்ன்னு தோணும். நான் அந்த மாதிரியான நிலைமைய ரொம்ப மோசமாவே அனுபவிச்சிருக்கேன்" என்று கூறுகிறார்.
கணவரை பிரிந்த ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டில் தான் அதற்கான காரணத்தை முதல் முறையாக ஓப்பன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!